இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் கேமராவை வைத்து இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், சைலன்ஸர்கள் பொருத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் அதிக ஒலி எழுப்பும் பல குரல் ஒழிப்பான், மாற்றி அமைக்கப்பட்ட ஹேண்டில் பார் பொருத்தி இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.