
உலகின் மிகவும் புகழ்பெற்ற செல்வந்தர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவர் 60 வயது ஆகியும் மிகவும் இளமையாக காணப்படுகிறார். இவரின் இந்த அழகான தோற்றத்திற்கு முக்கிய காரணம் மேக்கப் கலைஞர் மிக்கி கண்ட்ராக்டர் ஆவார். நீதா அம்பானி எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாலும், அவரது ஸ்டைலிஷ் தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.
அதோடு முக்கியமான நிகழ்ச்சிகளில், பிரம்மாண்டமான உடைகள், அழகிய மேக்கப், அழகு பராமரிப்பு ஆகியவற்றால் அவர் ஒளிர்ந்து நிற்பது, பெரும்பாலான நேரங்களில் மிக்கி கண்ட்ராக்டர் என்பவரின் மேக்கப் திறமையின் விளைவாகும். பாலிவுட்டின் மிக பிரபலமான மேக்கப் கலைஞராக விளங்குபவர் மிக்கி கண்ட்ராக்டர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த துறையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு ‘பேகுதி’ திரைப்படத்தில் காஜோலுக்கு மேக்கப் செய்யும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதன்பிறகு வெற்றிப் பாதையில் பயணித்துள்ளார். தற்போது நீதா அம்பானி, அவரது மகள் ஈஷா அம்பானி மற்றும் மருமகள் ஷ்லோக்கா அம்பானி ஆகியோரின் பிரதான மேக்கப் கலைஞராக மிக்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் மிக அதிகம் சம்பளம் வாங்கும் மேக்கப் கலைஞர்களில் ஒருவராக விளங்கும் மிக்கி, ஒரு வாடிக்கையாளரிடம் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூலிக்கிறார். பாலிவுட்டின் முக்கிய நடிகைகளான கரீனா கபூர், தீபிகா படுகோணே, ஆலியா பட், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் மற்றும் பலருக்கும் மேக்கப் செய்துள்ளார். அம்பானி குடும்பத்திற்காக பிரத்யேகமாக பணியாற்றும் மேக்கப் கலைஞராக, அவர்களுக்கு ஏற்ப தனிப்பட்ட அழகு பராமரிப்பு முறைகளை உருவாக்கிய மிக்கி கண்ட்ராக்டர், பாலிவுட்டின் அழகை மிக அழகாக வடிவமைக்கும் முக்கிய நபராகத் திகழ்கிறார்.