
அரியானா மாநிலத்தில் குர்கான் மாவட்டத்தில் உள்ள குரு கிராம் பகுதியில் சட்ட அமலாக்க துறை அதிகாரியாக நடித்து ஒரு கட்டுமான நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள இளைஞரை சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குரு கிராம் பகுதியை சேர்ந்த ரவி ராஜ்குமார் என்பது தெரியவந்தது.
மேலும் இவர் ED அதிகாரி போல ஏமாற்றி கட்டுமான நிறுவன ஊழியர் மட்டுமல்லாது அப்பகுதியில் பலரிடம் மோசடி செய்துள்ளார். இதில் கட்டுமான உரிமையாளரிடம் ரூபாய் 80 லட்சம் வரை மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இவரிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் ரெக்கார்டுகள், வங்கி கணக்கு விவரங்கள், whatsapp ஆடியோக்கள் போன்ற முக்கிய ஆதாரங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இவர் பல சிம் கார்டுகளை பயன்படுத்தி தனது உண்மையான அடையாளத்தை மறைத்து நூதன முறையில் மோசடி செய்து வந்தது அம்பலம் ஆகியது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குரு கிராம் சென்டர் 10 காவல் நிலையத்தில் ரவி ராஜ்குமார் மற்றும் அவரது அடையாளம் தெரியாத கூட்டாளிகளை கைது செய்து பாரதிய நியாய சன்ஹிதாவின்(BNS) கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.