
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் ஒரு விடுதி உள்ளது. இங்கு 23 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சம்பவ நாளில் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளரா. அவர் அந்த பெண்ணிடம் youtube இல் உங்களின் நிர்வாண வீடியோ இருப்பதாக பொறி பணம் கேட்டு பொறி பணம் கேட்டுள்ளார். இதைக் கேட்டு பயந்து போன அந்தப் பெண் அவர் கேட்ட ரூ.6,500 பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த நபர் அந்த பெண்ணின் தந்தைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம் உங்கள் மகளின் நிர்வாண வீடியோ இருப்பதாகவும் அதை நீக்குவதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் வழி வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி யாரோ பொய் தகவல் மூலம் பணம் பறித்தது தெரியவந்தது. மேலும் இளம்பெண்ணை மிரட்டிய மர்ம நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.