உத்திர பிரதேசத்தின் வாரணாசி ஜம்மு தவாய் இடையே செல்லும் பெகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் யூடியூபர் ஒருவரை பாண்ட்ரி மேனேஜர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ரயிலில் பயணித்த யூடியூபர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து காபி வாங்கி உள்ளார். அப்போது அதற்கான பில் கேட்டபோது பாண்ட்ரி ஊழியர்கள் அதனை வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாண்ட்ரி மேனேஜருக்கும், யூடியூபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யூடியூபரை பாண்ட்ரி ஊழியர் கேமராவை அணைக்கச் சொன்னார் . ஆனால் தொடர்ந்து வாக்குவாதம் அதிகமானதால் மேனேஜரும், யூடியூபரை வீடியோ எடுக்க தொடங்கினார். இதைத்தொடர்ந்து யூடியூபரின் கேள்விகளால் கோபமான மேனேஜர் அவரை அடித்துவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகளால் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை 1,94,000 க்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில் நெட்டிசன்கள் பலரும் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக தங்களுடைய கேள்விகளை பதிவு செய்து வருகிறார்கள்.