
அமெரிக்காவின் மெக்ஸிகோவில் இருக்கும் மான்டேரி நகரில் சுற்றுலா பூங்கா அமைந்துள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஜீப் லைனில் சாகச பயணம் செய்வது வழக்கம். கடந்த மாதம் 25ஆம் தேதி 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப் லைனில் சாகச சவாரி செய்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக 40 அடி உயரத்தில் இருந்து சிறுவன் கீழே இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான்.
இதையடுத்து அங்கிருந்த சக சுற்றுலா பயணி ஒருவர் குளத்தில் குதித்து சிறுவனை மீட்டு கொண்டு வந்தார். அதிர்ஷ்டவசமாக குளத்தில் விழுந்ததால் சிறுவனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதே தவிர உயிருக்கு ஆபத்து இல்லை. இதனிடையே இந்த அசம்பாவிதம் தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து சுற்றுலா பூங்கா குறித்து பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.