காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததோடு தண்ணீரையும் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் பாகிஸ்தானம் ரத்து செய்தது.

இதனால் தற்போது எல்லையில் போர் பதற்றம் நிலை வரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது தொடர்பாக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் சி ஆர் பாட்டீல் ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார்.

அந்த பதிவில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்தது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தேச நலன் மிக்க முடிவு. இனி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிந்து நதிநீரை நம்பி 92 சதவீதம் விவசாயம் பாகிஸ்தான் நாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.