தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார் பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை அவரது அக்கா கூறியுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான மகா சங்கமம் நிகழ்ச்சியில் சரத்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சரத்குமாரின் அக்கா உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு முழு ஆதரவு என் தம்பி சரத்குமார் தான். குழந்தையாக இருக்கும்போது நான் சொல்லும் கதைகளை எல்லாம் முதல் முறை கேட்பது போல உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பான்.

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)

நாங்கள் எல்லோரும் சேர்ந்து படிப்போம். ஆனால் என் தம்பி புத்தகத்தை என்னை சுற்றி அடுக்கி வைத்து என்னை எந்த பூச்சியும் தாக்கி விடக்கூடாது என்பதற்காக அரன் வைத்திருக்கிறேன் எனக் சொல்லுவான். நடிக்கப் போகிறேன் என்பதை என்னிடம் தான் முதன்முறை சொன்னான்.

எனது கணவர் இறந்த பிறகு சொல்ல முடியாது வேதனையில் இருந்தேன். எனது கணவர் குடும்பத்தினர் என்னை ஒதுக்கி விட்டனர். ஆனால் எனது தம்பி என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று எனக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தான்.

ராதிகா எங்களை இப்போதும் பாசமலர் என்றுதான் கிண்டல் செய்வார். நாங்கள் அவ்வளவு பாசமாக இருப்போம். எனக்கு ஒன்று என்றால் என் தம்பி துடித்து போய் விடுவான். அவனுக்கு ஒன்று என்றால் என்னால் தாங்க முடியாது.

நான் நினைப்பதை எல்லாம் என் தம்பி நிறைவேற்றி விடுவான் என உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதும் சரத்குமார் கண்கலங்கி நின்றார். இந்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.