சேலம் மாவட்டம் செம்படபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மணி. கடந்த 10 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

மணி தனது மகன் ஹரி கோபாலகிருஷ்ணன் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீஷ் என்பவருக்கும் ஹரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த ஜெகதீஷ் தனது தம்பி மணிகண்டன் உடன் இணைந்து ஹரியின் வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அந்த தீ அடுத்தடுத்த வீடுகள் மீதும் பரவியது.

இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெகதீஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.