தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக மொத்தமாக பொங்கல் பண்டிகைக்கு செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய தினம் திங்கள்கிழமை. அன்றைய தினம் மற்றும் விடுமுறை வழங்கப்பட்டால் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை வந்துவிடும்.

இதனால் திங்கள்கிழமையும் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கோவில் விழாவை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதைத்தொடர்ந்து  ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவிலில் ஆருத்ர தரிசன விழா ஜனவரி 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திலும் மொத்தம் பொங்கல் பண்டிகையில் 9 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. மேலும் நாளை முதல் 9 நாட்களுக்கு கடலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.