தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் தமிழ் சினிமாவில் என் மகனுக்கு முன்பாக சிக்ஸ் பேக் வைத்த நடிகர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கூறினார்.

அதாவது நடிகர் சூர்யா தான் முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்ததாக சிவக்குமார் கூறிய நிலையில் அது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. ஏற்கனவே நடிகர் தனுஷ் பொல்லாதவன் திரைப்படத்திற்காகவும் விஷால் சத்யம் திரைப்படத்திற்காகவும் சிக்ஸ் பேக் வைத்து விட்டதாக கூறிய நிலையில் இது பற்றி நடிகர் விஷால் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது, நடிகர் தனுஷ் தான் முதன்முதலாக பொல்லாதவன் திரைப்படத்திற்காக சிக் பேக் வைத்தார். அதன்பிறகு நான் சத்யம் மற்றும் மதகஜராஜா உள்ளிட்ட படங்களுக்காக வைத்தேன்.

சிவக்குமார் மறந்து அப்படி சொல்லி இருக்கலாம் என்றார். மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படம் வெளிவந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஷாலின் சத்யம் திரைப்படமும் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படமும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.