கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் (88), உடல்நலக்குறைவால் வாடிகனில் காலமானார்.

சுவாச கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த சில வாரங்களாகவே அவர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று காலை அவரது மறைவின் செய்தியை வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

போப்பாண்டவர் பிரான்சிஸின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மனிதநேயத்தையும், இரக்கத்தையும் கடைபிடித்த நம்பிக்கையின் உருவாக விளங்கியவர் போப்பாண்டவர் பிரான்சிஸ்.

மதங்களுக்கு இடையேயான அமைதி, உரையாடல், சமூக நீதிக்கு ஆதரவு மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அவரது குரல் உலகளாவிய மரியாதையைப் பெற்றது. அவரது மறைவு நமக்கெல்லாம் மிகுந்த இழப்பாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.