மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச மாநிலம் சிவ்பூரியில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது கீழே இருந்த ஒரு பெண் புகையிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண் குட்கா போன்ற புகையிலை சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அவரை கவனித்த ஜோதிராதித்ய சிந்தியா அந்தப் பெண்ணை பார்த்து சிரித்தார். பின்னர் அவர் அருகில் சென்று குட்கா புகையிலை சாப்பிடுகிறாயா என்று மெதுவாக கேட்டார். அந்தப் பெண் கூச்சத்தோடு சிரித்த நிலையில் பின்னர் அவருடைய பையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். பின்னர் அந்த பெரிய பையை பெண் வெளியே எடுத்த போது அதில் குட்கா புகையிலை இருப்பது தெரிய வந்தது.

அந்தப் பையை வாங்கி தன்னுடைய ஊழியர்களிடம் கொடுத்து அவர் அக்கா குட்கா சாப்பிடாதே என்று அன்போடு கூறினார். நான் உன்னை பிடித்து விட்டேன் இனி உன்னுடைய உடல் நலம் பாதிப்படையாது என்று கூறிய நிலையில் அந்த பெண்ணும் இனி நான் குட்கா சாப்பிட மாட்டேன் என்று உறுதி கொடுத்தார். அந்த பெண்ணுடன் சேர்ந்து பின்னர் அவர் போட்டோ எடுத்துக் கொண்டார். மேலும் இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பின்னர் அவர் அந்த பெண்ணிடம் நான் இதை சொன்னதற்காக வருத்தப்படாதே என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.