உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வினோதமான உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. உபி  மாநிலம் மிர்சாபுரை சேர்ந்த இவருக்கும் ஸ்மிருதி சிங்க், சத்யம் சிங்க்  என்பவருக்கும் 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ஸ்ம்ருதி சிங் அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். இதை எடுத்து அவர் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த முதல் கணவர் சத்யம் சிங் தன்னுடைய மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தன்னிடம் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் அனுப்பியிருந்த சம்மனை ரத்து செய்ய கோரி அலகாபாத்  உயர்நீதிமன்றத்தில் ஸ்மிருதி சிங்  மனுதாக்கல்  செய்திருந்தார். இந்த மனுவானது விசாரணைக்கு வந்தது. அப்போது உங்கள் மனைவி இரண்டாவது திருமணம் செய்ததாக கூறுகிறீர்கள். ஆனால் அந்த திருமணத்தில் சட்டப்படி சடங்கு அக்னி ஏழுமுறை சுற்றுதல் நடைபெற்றதா? இல்லையா என்று நீங்கள் கூறவில்லை. அந்த சடங்கு நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்து திருமண சட்டப்படி சப்தபடி சடங்கு நடைபெறாமல் நடக்கும் திருமணங்கள் செல்லாது இதற்கான ஆதாரத்தை நீங்கள் கொடுக்காததால் உங்கள் மனைவி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.