உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியா என்ற மாவட்டத்தை சேர்ந்த அக்னிவீர் ஸ்ரீகாந்த் குமார் சவுத்ரி(22) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள விமானப்படை நிலையத்தில் காவல் பணியில் இருந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை இவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை குழுவை அமைத்தனர். ஸ்ரீகாந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஸ்ரீகாந்தின் உடல் அவருடைய சொந்த கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை சகனம் செய்யப்பட்டது.