
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வரோரா தாலுகா தாதாபூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது பிரவீன் மோரேஷ்வர் நன்னாவாரின் மனைவி கிரண் பிரவீன். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பிரியேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார்.
இந்த நிலையில் மகனை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி இருந்த நிலையில் அங்கு சத்துணவு வழங்கப்பட்டது. பாக்கெட்டை திறந்து பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்துள்ளது. இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.