
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் காவலா பாடல் வெளியாகி ஒரு சில நிமிடத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்தது.
இந்த நிலையில் ஏ ஐ எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பாடலுக்கு சிம்ரன் ஆடுவது போல மார்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தமன்னாவே அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட நடிகை சிம்ரன் டேக் செய்து பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி விட்டு வருகிறார்கள்.
Simran edition #Kaavaalaa @anirudhofficial @simranbaggaoffc @sunpictures @tamannaahspeaks #GenerativeAI #muonium pic.twitter.com/EHBCUaNZq9
— Senthil Nayagam (@senthilnayagam) July 11, 2023