
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே ஒருமுறை நடிகர் பிரபுவுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே மருத்துவமனையில் மீண்டும் உடல் நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் பிரபுவுக்கு தற்போது மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது அவருக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடுமூளைத் தமணியில் பிளவு பகுதியில் கரோட்டின் தமனியின் மேல் பகுதியில் ஒரு வீக்கம் மற்றும் பலூன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.