
மேற்கு வங்கத்தில் அடிடனோ வைரஸ் அதிகமாக பரவி வருவதன் காரணமாக குழந்தைகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் மேற்குவங்கத்தில் டிசம்பர் மாதத்தில் தீவிர காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்களின் உடலில் உள்ள சளி மாதிரியை ஆய்வு செய்ததில் இவர்கள் அடினோ என்ற வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அடினோ வைரஸ் காரணமாக 19 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அனைத்து குழந்தைகளும் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் இருமல் அல்லது சளி அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வைரஸ் தாக்கம் காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.