தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணியின் இல்ல திருமண விழாவில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின், விஜய் சேதுபதி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழ் குமரன் அழைப்பின் பேரில் ஜேசன் சஞ்சய் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்துள்ளார். . மேலும் பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜய் போலவே ஜேசன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.