நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இரண்டு பேரும் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் சென்ற 2000- ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி நடந்தது. இத்திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அஜித் -ஷாலினி இருவரும் திருமணம் செய்து நேற்றுடன் 23 வருடங்கள் நிறைவடைகிறது. இதனையொட்டி இருவரும் தங்களது குடும்பத்தினருடன் அதை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர். தற்போது அஜித் -ஷாலினியின் 23வது திருமணநாளையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறியதோடு, #ஷாலினிஅஜித்குமார் எனும் ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.