
உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் நடனமாடிய போது மணப்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரேயா என்ற பெண்ணுக்கு லக்னோவில் வசிக்கும் இளைஞர் ஒருவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில் நடனமாடிய மணப்பெண் ஸ்ரேயா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை சோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளால் ஸ்ரேயா உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.