ராஜஸ்தான் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவர் பள்ளியிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவன், வகுப்புக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு யதேந்திர உபாத்யாய் (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பள்ளியில் வகுப்பறைக்கு செல்லும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக, மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் இதயக் கோளாறுகளுடன் பிறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.