ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அப்போது இருமல் மருந்து பாட்டில் ஒன்றாக கிடந்தது. அந்த பாட்டிலை பாம்பு விழுங்கிய நிலையில் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பாம்பு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஹெல்ப்லைனுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கொக்கி முனையால் பாம்பின் தாடையை மெதுவாக விரித்து பாட்டிலை எடுத்தனர். அதன் பிறகு அந்த பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். இது தொடர்பான வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.