ஹைதராபாத்தில் வம்சி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்ரிமோனி தளங்களில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இளம் பெண்களின் ஜாதிக்கு ஏற்றவாறு தனது பெயர்களை மாற்றி பெண்களுடன் பேசி உள்ளார். அந்த வகையில் வம்சி கிருஷ்ணா இதுவரை 50 பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

சமீபத்தில் கூட வம்சி கிருஷ்ணா ஒரு டாக்டர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடமிருந்து 40 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அதன்பிறகு பணத்தை திருப்பி கேட்டால் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வம்சி கிருஷ்ணாவை தேடி வருகின்றனர். ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டவர். வம்சி கிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறும்படத்தக்கதாகும்.