ஒருகாலத்தில் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான கதாநாயகனாக வலம் வந்த ஜகபதி பாபு இப்போது தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில்நடித்து வருகிறார் . சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது உடற்பயிற்சி வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார்.  அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஜகபதி பாபு நடந்து சென்று கொண்டிருக்கும் போது யாராலும் கவனிக்கப்படாமல் ஒரு மொபைல் கடையை நோக்கிச் செல்கிறார். அந்த வழியில் தானாகவே வீடியோ பதிவு செய்து, “என் வாழ்க்கை கருப்பு வெள்ளை” என்ற வார்த்தையை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை என்பது தான். அவர் ஒரு சாதாரண மனிதனாகவே கூட்டத்தில்  காணப்பட்டுள்ளார்.  திரையில் வலம்வரும் பிரபலங்கள், தங்கள் உண்மையான வாழ்க்கையில் சில நேரங்களில் யாரும் கவனிக்காத நேர்மறையான தனிமையில் வாழ நேரிடும் என்பதை இந்த வீடியோ நம் முன்னே காட்டுகிறது. இது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும், கருத்துக்களையும் எழுப்பியுள்ளது.