
வெளிநாட்டவர்கள் இந்திய கலாச்சாரம், கலை, உணவு, நடனம் மற்றும் மொழி ஆகியவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதற்கான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நம்மால் இப்பொழுது காண முடிகிறது.
அந்த வகையில், தற்போது கிளாரா என்ற ஜெர்மனியை சேர்ந்த பெண்மணி ஒருவர் உபெர் டிரைவரிடம் மலையாளத்தில் சரளமாக பேசி அவரை ஆச்சரியப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இவர் தற்போது இந்தியாவில் வசித்து ஜெர்மன் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கிளாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1,71,000 பாலோவர்ஸை வைத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் டிரைவர் ஒருவரிடம் மலையாளத்தில் உரையாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
‘உபெர் டிரைவர்களுடன் மலையாளத்தில் பேசுவது எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும் எனவும் ஒரு முறை நான் பேசிய போது அவர் கொடுத்த ரியாசங்களை வீடியோவாக எடுத்துள்ளேன்’ என்று இந்த வீடியோவிற்கு தலைப்பு வைத்துள்ளார்.அந்த வீடியோ பதிவில் அவர் அந்த டிரைவரிடம் ‘நீங்கள் வெளிநாட்டவர்கள் எவரும் மலையாளத்தில் பேசிப் பார்த்ததில்லையா?’ என்று கேட்டார். அதற்கு அந்த டிரைவர் இல்லை என்று பதில் கூறினார். பின்னர் அவர் அச்சமின்றி சரளமாக டிரைவருடன் மலையாளத்தில் உரையாட தொடங்குகிறார்.
அந்த வீடியோ வைரலாகிய நிலையில், கிளாரா மலையாளம் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதையும், டிரைவர்கள் கொடுத்த ரியாஷங்களுக்கும் பல பாராட்டுக்கள் மற்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. ‘ஓ ஆஹா! நீங்கள் மலையாளத்தை மிகவும் மென்மையாக பேசுகிறீர்கள்’ என்று ஒருவர் கூறியிருந்தார். மற்றொருவர் ‘ நீங்கள் என்னை விட நன்றாக பேசுகிறீர்கள்’ என்று நகைச்சுவையாக ஒப்புக்கொண்டார்.
மற்றொருவர் ‘எனது மகளின் மலையாளத்தை விட உங்கள் மலையாளம் நன்றாக உள்ளது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். மற்றொருவர் ‘நான் சைக்கிள் முன் குதித்து சாக போகிறேன் அவர் என்னை விட நன்றாக பேசுகிறார்’ என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் ‘அடடா! அவர் மலையாளம் நன்றாக பேசுகிறார். சிரிப்புகள் கூட நன்றாக இருக்கின்றன’ என்ற பாராட்டியுள்ளார். மேலும் ஒருவர் ‘ இந்த கடினமான மொழியைக் கற்றுக்கொண்டது உண்மையில் நம்ப முடியாத முயற்சி’ என்று கூறியுள்ளார்.
கிளாரா தனது இன்ஸ்டாகிராம் பயோவில் தான் எண்ணும் மொழியை கற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன் சக ஆசிரியர்களுடன் மலையாளத்தில் பேசும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். ‘கிளாரா மலையாளத்தின் மீது கொண்ட அன்பின் காரணமாக அதனை கொரோனா காலத்தில் கற்றுக் கொண்டார். அவரின் மலையாள உச்சரிப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது ‘.எனவும் மல்பெரி கிளாராவை பாராட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DHSdcr3p7lC/?igsh=MXAwMGh4MjNreGZiZg==