
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதம் அகவிலைப்படியை பெறுவார்கள்.
இதனை அடுத்து மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசை பின்பற்றி தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் அசாம் மாநிலத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக மாநிலத்தில் அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்கள் தற்போது பெற்று வரும் 38 சதவீத அகவிலைப்படி இருந்து 42 சதவீதமாக பெறுவார்கள். கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது