ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள துபாய் பிரபலமான சுற்றுலா தளமாக இருப்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். இன்று சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏராளமான ஆடம்பர ஹோட்டல்கள், உயரமான கட்டிடங்கள் போன்ற பல அற்புதமான இடங்கள் உள்ளது.

இந்நிலையில் தற்போது துபாய் அரசு புதிதாக கடற்கரை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காக சுமார் 6.6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை உருவாக்குகிறது. இதில் ஒரு நீச்சல் குளம் மற்றும் தீம் பார்க்கள் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களும் வர இருக்கிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.