உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாட்டை  சேர்ந்த 18 வயதான குகேஷ் வென்றுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் என்பது குவிந்து வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன்பிறகு 5 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதன் பிறகு குகேஷுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

அதன்படி குகேஷ் அவருடைய பெற்றோருடன் சென்ற நிலையில், அவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி வெற்றியை சிவகார்த்திகேயன் கொண்டாடினார். பின்னர் ஒரு விலை உயர்ந்த கைகடிகாரத்தை குகேஷுக்கு சிவகார்த்திகேயன் பரிசாக கொடுத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.