இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே வீடுகளில் நாய்கள் மற்றும் பூனைகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள்.

இவை செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வபோது பகிரப்படும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், குட்டி பூனை ஒன்று வாத்தை கட்டி அணைத்து தழுவி கொள்கிறது. இந்தப் பூனைக்குட்டியின் செயலை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கிறது. தன்னுடைய தாய் என்று நினைத்து தான் பூனை இப்படி செய்கிறதா என கேள்வியும் எழுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.