
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து மத்திய உணவு திட்டம் குறித்து பேசிய அமைச்சர் நமசிவாயம் தற்போது அதில் சில முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிதாக 2023-24 ஆம் கல்வியாண்டில் இருந்து மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.