
மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு வகையான உதவித்தொகைகளை வழங்கி வரும் நிலையில் சாதாரண மக்கள் தங்கள் அவசர காலங்களில் மற்றும் வயது முதிர்வு காலங்களில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்க பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் பயனடையலாம். இதில் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் உள்ள சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளவர்கள் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தில் ஆரம்பத்தில் ஒருமுறை மட்டும் 20 ரூபாய் செலுத்த வேண்டும். பிறகு வருடத்திற்கு ஒருமுறை கட்டணம் நேரடியாக உங்களின் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் உங்கள் மரணத்திற்கு பின்னர் 2 லட்சம் ரூபாய் தொகை அல்லது விபத்துகளினால் 50 சதவீதத்திற்கும் மேல் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும். மேலும் விபத்து நடந்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்தி இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த தொகை உங்களுக்கு கிடைக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.