
தஞ்சாவூர் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளையும் மனுக்களையும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து கொண்டே தங்களின் குறைகளை இந்த புதிய செயலி மூலமாக தெரிவிக்கலாம். குப்பை இருந்தாலோ,கழிவுநீர் தேங்கி இருந்தாலும் அல்லது கால்நடைகளால் தொல்லை ஏற்பட்டாலோ புகைப்படங்களுடன் உடனடியாக புகார் தெரிவித்தால் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
இந்த செயலி தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்த செயலி மூலம் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையையும் கொண்டு வந்துள்ளதாக மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.