
சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு பிரத்தியேக கைபேசி செயலி ஒன்றை சென்னை எம் வி சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலியின் மூலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம். சர்க்கரை நோயின் காரணமாக பாதங்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக இந்த புதிய செயலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி ஒரு வாட்ஸ்அப் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மருத்துவ நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு சர்க்கரை நோய் மற்றும் அதனால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை பெறலாம். இந்த புதிய செயலை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.