
தமிழக அரசு சார்பாக பயணிகளின் வசதிக்காக பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்துகளும் மக்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கடந்த மூன்று மாதமாக அரசு விரைவு பேருந்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு 2.24 லட்சம் ரூபாய் வரை பயண கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் அரசு விரைவு பேருந்துகளில் தொடர்ச்சியாக பயணம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் ஐந்து முறை பயணம் செய்வதற்கு ஆறாவது முறை பயணம் செய்தால் 50% கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் இந்த திட்டம் தற்போது அமலில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே அரசு விரைவு பேருந்துகளில் தொடர் பயணம் செய்யும் பயணிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.