
பிரபல மலையாள தொலைக்காட்சி சீரியல் நடிகை அப்சரா. இவர் பல சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். அதோடு மலையாள பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர். இவருடைய தந்தை ரத்னாகரன் காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டார்.
இதனால் வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு தந்தையின் வேலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து கலைத்துறையில் விருப்பம் கொண்ட அப்சரா தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலின் காரணமாக இந்த பணியை ஏற்றுக்கொண்டார். மேலும் அதற்கான ஆணையும் கிடைத்துவிட்ட நிலையில் அப்சரா, நான் எனக்கு கிடைத்த பணியை மிகவும் சிறப்பாக செய்வேன் என கூறியிருக்கிறார். மேலும் நடிகை ஒருவர் காவல்துறை அதிகாரியாக பொறுப்பேற்றதற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது