
90கள் காலத்தில் தமிழ், மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ஜோதிமயியின் தற்போதைய நிலை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மலையாள சினிமாவில் “இஷ்டம்” படத்தின் மூலம் திரையுலகில் தன் அறிமுகத்தை செய்த இவர், பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குறிப்பாக, சுந்தர் சி இயக்கத்தில் “தலைநகரம்” படத்தில் ஹீரோயினாக நடித்த அவரது திவ்யா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் மாறாத இடத்தைப் பிடித்தது.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிமயி, தமிழில் “இதயத்திருடன்” போன்ற படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்ததோடு, “பெரியார்”, “நான் அவன் இல்லை”, “அரை எண் 350”, “சபரி” போன்ற பல்வேறு படங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். அவரின் அழகு மற்றும் திறமையான நடிப்புக்காக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்ட அவர், தமிழ் சினிமாவில் கைகூடிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

இப்போது 41 வயதான ஜோதிமயி தலைமுடி முழுவதும் நரைச்சு, அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். அவரை பார்த்த 90களின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து, அவருக்கு என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். பேஷனில் இருந்த நடிகையின் இவ்வாறு மாறிய நிலை அனைவரையும் கவலையிலும் சோகத்திலும் ஆழ்த்தி விட்டது. பலர் இவரின் ஆரோக்கியம் குறித்து கவலைப்பட்டு, “இந்த நிலைமை எப்படி வந்தது?” என பரிதாபத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.