
கேரள மாநிலத்தில் பலாப்பழத்திற்கென்று தனியாக திருவிழாவானது நடத்தப்படுகிறது. ‘சக்க மஹோஸ்தவம் என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவானது கேரளாவில் உள்ள பல மாவட்டங்களிலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பழத்தை அங்கு சக்கபழம் என்றும் அழைப்பார்கள்.
இந்த பழத்தை பிரதானமாக வைத்து சக்க பிரதன் என்ற பாயாசம் வகையும் சக்க கொழுக்கட்டைகளும் அங்கே தயார் செய்யப்படுகிறது. மேலும் சித்திரை விசு போன்ற நாட்களில் முக்கனிகளான மா, பலா, வாழையை கடவுள் முன்பாக படைத்து வணங்குவது அவர்களுடைய வழக்கமாகவும் இருக்கிறது.