பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் பூனை செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவது உண்டு பூனை மட்டுமல்லாமல் நாய், கிளி போன்றவைகளும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள்.  இந்த செல்லப்பிராணிகளுக்கு ஒரு சிலர் பிறந்தநாள், வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவற்றை வெகு விமர்சையாக கொண்டாடுவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அமெரிக்காவில் மேக்ஸ் என்ற பூனைக்கு Doctor-of litrature என்ற கௌரவப்பட்டதை அமெரிக்காவின் வெர்மாண்ட் ஸ்டேட் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் இருப்பவர்களுடன் அன்பாக பழகுவது மற்றும் மாணவர்களை மகிழ்ச்சியாக்குவது போன்ற காரணங்களால் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.