தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தன்னுடைய கடினமான உழைப்பின் காரணமாக முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் பிரின்ஸ் படம் வெளியான நிலையில், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கும் நிலையில் நேற்று படத்தின் முதல் பாடல் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தன்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை மாவீரன் படக்குழு படப்பிடிப்பு தளத்தில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது இயக்குனர் மிஷ்கின், மடோன் அஸ்வின், அதிதி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் இருந்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.