உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருந்து கடையின் உரிமையாளரை சிலர் கொடூரமாக குச்சிகள் மற்றும் கட்டைகளால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் அந்த மருந்து கடைக்குள் சிலர் ஆயுதம் ஏந்தி நுழைகின்றனர்.

அவர்கள் திடீரென அந்த கடையின் உரிமையாளரை கொடூரமாக அடித்து தாக்கிய நிலையில் இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்து சிசிடிவியில் பதிவாகி வைரலானது. அவர்கள் 20 வினாடிகளில் 28 முறை அவரை அடித்துள்ளனர். இந்நிலையில் வீடியோ வைரலான நிலையில் லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்கள் மருந்து கடையில் உரிமையாளரை கொடூரமாக தாக்கிய நிலையில் அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை காப்பாற்றினார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தான் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

 

 

இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.