குஜராத்தில் 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பலர் மீது மோசடியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காந்திநகரை சேர்ந்த 37 வயது நபர் மோரிஸ் சாமுவேல், தனது அலுவலகத்தை ஒரு நீதிமன்றமாக மாற்றி, தன்னை நீதிபதியாகக் காட்டி, மனுதாரர்களிடமிருந்து பணம் வசூலித்துள்ளார். இவரின் கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் நடித்து, பலரை மோசடியாக வந்தணைத்து விட்டனர்.

சாமுவேல், நிலத்தகராறு தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறோம் எனவும், அரசு அதிகாரிகள் தனது நியமனத்தின்படி தன்னை நியமித்துள்ளார்கள் எனவும் கூறி, மனுதாரர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வருவார். அவர் மனுதாரர்களுக்கு தேவையான தீர்ப்புகளை வழங்கி, பணம் வாங்கியுள்ளார். இதற்காக, அவர் அனைத்து சட்டங்களை மீறி செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பால்டி பகுதியில் இருக்கும் அரசு நலம் தனக்கு சொந்தமானது என்றும், வருவாய் பதிவேடுகளில் தனது பெயரை சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்கு தொடர்ந்தார் சாமுவேல் அவரிடம் இருந்து பணம் வாங்கி அவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது தனது உத்தரவை ஒரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். அது போலியான உத்தரவு என்பது கண்டறியப்பட்டு சாமுவேல் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.