
சீனாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டல்களில் இலவசமாக தங்கவும் பணம் பறிப்பதற்காகவும் ஒரு நபர் வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளார். அவர் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், இறந்த கரப்பான் பூச்சிகளை கொண்டு ஹோட்டல் நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளார். 21 வயதுடைய ஜியாங்க் என்ற வாலிபர் இறந்த பூச்சிகள் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அந்த ஹோட்டலில் போட்டுள்ளார்.
அதன் பிறகு இந்த இடம் சுகாதாரமற்று இருப்பதாக குற்றம் சாட்டி 4 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் பறித்துள்ளார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் இதனை வைத்து அந்த நபர் இலவசமாக தங்கி உள்ளார். தொடர்ந்து இதுபோல் ஏமாற்றி வந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.