தர்மபுரி மாவட்டம் மணிகட்டியூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான சிவன் (38) தன்னுடைய மனைவி நந்தினி (28) , மகன்களான அபினேஷ் (6), தர்ஷன்(5) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனைத் தொடர்ந்து அசாம் பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வீட்டுக்குள் நந்தினி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் உடல் அழகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் மனைவி மற்றும் மகன்கள் உடல்களுக்கு அருகே சிவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருந்த சிவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவனும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.