
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரர். இவர் தற்போது இமாச்சல் பிரதேசத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரூபாபாய் (31) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர் தன் கணவரின் தாயார் செவந்தாவுடன் வசித்து வந்துள்ளார். இதில் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் தன் மருமகளை மாமியார் குறை கூறி வந்துள்ளார். இதனால் ரூபா பாய் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய மாமியார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாமியாருடன் சண்டை ஏற்பட்டதில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தைகள் இருவரும் தாயின்றி தவித்து வருவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.