
கோயம்புத்தூரில் கடந்த இரு தினங்களாக பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் விஜய் நேரடியாக கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆதவ் அர்ஜுனா அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலில் போராட்டத்தை அறிவித்தது தவெக தான். இந்த விவகாரத்தில் விஜய் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. விஜய் எதற்காக 3 நம்மிடம் மட்டும் பேசினார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் மூன்று நிமிடம் பேசியதற்கு கோவை ஸ்தம்பித்துவிட்டது.
எனவே எங்களுடைய திட்டம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். இரண்டு மணி நேரம் வாக்களித்தவர்களின் லிஸ்ட்டை வைத்து கள்ள ஓட்டு போட வாய்ப்பு இருப்பதால் இதனை நீங்கள் கவனத்தோடு பார்ப்பதோடு உடனடியாக தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்படி தகவல் தெரிவித்தால் அந்த வாக்கு சாவடிப்பட்டி சீல் வைக்கப்படாது. கண்டிப்பாக தலைமை அந்த இடத்திற்கு வந்து உதவி செய்யும். ஊழல் ஆட்சியை, அடிமை ஆட்சியை = ஒழிப்பதற்காக தான் தற்போது இங்கு ஒரு புரட்சி நடைபெறுகிறது.
இது மக்களின் செல்வாக்கு. இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நாள். 2 நாட்களாக கோவை முடங்கி விட்டது. மேலும் வரலாறு உருவாகும்போது கண்டிப்பாக பழைய காலத்தை பற்றி பேசுவார்கள் என்று கூறினார்.