
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாய விழாவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கலந்து கொள்ள மாநில அமைச்சர்கள் உத்தம் குமார் ரெட்டி, ஜூபல்லி கிருஷ்ணா ராவு மற்றும் தும்மலா நாகேஸ்வர ராவு ஆகியோர் ஹெலிகாப்டரில் வந்தனர்.
இந்நிலையில், அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹெலிகாப்டர் லேண்டிங்குக்காக லாஞ்ச் பேட் அமைத்திருந்தனர். ஆனால் ஹெலிகாப்டர் பைலட் தவறாக விழா நடைபெறும் இடத்திலேயே ஹெலிகாப்டரை லேண்ட் செய்துள்ளார்.
బ్రేకింగ్ న్యూస్
మంత్రుల హెలికాప్టర్ అతి వాడకం ఎక్కువ అయిందని ప్రకృతి కూడా ఆగ్రహం
హెలికాప్టర్ ల్యాండింగ్ సమయంలో వీచిన గాలికి కూలిన స్వాగతం వేదిక
నిజామాబాద్, రైతు మహోత్సవం కార్యక్రమం కోసం హాజరవడం కోసం హెలికాప్టర్ లో వచ్చిన మంత్రులు ఉత్తమ్ కుమార్ రెడ్డి, జూపల్లి కృష్ణారావు,… pic.twitter.com/DrMzWBNyeH
— Telugu Scribe (@TeluguScribe) April 21, 2025
ஹெலிகாப்டர் தரையிறங்கும் தருணத்தில் எழுந்த பலமான காற்று, வரவேற்பு மேடையை சிதறடித்தது. இதனை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
இதில் போலீசாருக்கு இலகுவான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.