
இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காசா மீது போர் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் கூறியதாவது, பள்ளிகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததால் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் நாங்கள் பள்ளிகளில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்துவதில்லை என்று கூறினர். இந்நிலையில் கடந்த வருடம் போர் தொடங்கிய நிலையில் இதுவரை இஸ்ரேல் பள்ளிகள் உட்பட 170 பொது இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.