இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழா முடிவடைந்த பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பேருந்தில் அங்கிருந்து கிளம்பினர். இந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் இருந்த நிலையில் மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து ஏறி இறங்கியது.

அப்போது திடீரென பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.